KUALA LUMPUR, 2 Nov — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad bersama timbalannya, Datuk Seri Dr Wan Azizah Wan Ismail dan Menteri Kewangan Lim Guan Eng ketika hadir bagi pembentangan Belanjawan 2019 di Parlimen hari ini. Pembentangan itu menjadi detik sejarah buat rakyat Malaysia kerana buat pertama kalinya ia dilakukan oleh kerajaan Pakatan Harapan selepas 61 tahun negara ini diperintah kerajaan Barisan Nasional. –fotoBERNAMA (2018) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

துணைப் பிரதமர்: அரசாங்கம் தற்கால அரசியல் சூழ்நிலையை புரிந்து கொண்டுள்ளது

புத்ராஜெயா, ஆகஸ்ட் 29:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம், தற்போதைய அரசியல் சூழ்நிலையை புரிந்து கொண்டுள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார். நாட்டு மக்கள் தங்களது எதிர் பார்ப்புகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.

” இது போன்ற சூழ்நிலை சகஜமே. நமக்கு கிடைத்த வெற்றியே எதிர் பாராத விதமாக கிடைத்தது. புதிய அரசாங்கத்தை கையில் எடுத்த போது தான் உண்மையான நிலவரம் தெரிய வந்தது. நாட்டின் கடன் தொகை எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்ற அவல நிலை புரிந்தது,” என்று “ஸ்ரீ சாத்ரியன் அறிவுப்பூர்வ விவாதம்: 14-வது பொதுத் தேர்தலுக்கு பின் இஸ்லாமிய மலாய்க்காரர்களின் அரசியல்” எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு வான் அஸிஸா தெரிவித்தார்.

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அமைச்சரவையில் பங்கேற்ற அமைச்சர்கள் யாருக்கும் அனுபவம் இல்லை என்றாலும் தற்போதைய சவால் மிக்க அரசியல் சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்பட்டு  வருகின்றனர் என்று அவர் விவரித்தார்..

 


Pengarang :