NATIONALSELANGOR

பிபிஆர் வீடமைப்பு பகுதிகளில் விரிவான சோதனை மேற்கொள்வீர்!

ஷா ஆலம், ஆக.6-

மக்கள் வீடமைப்புத் திட்டங்களில் (பிபிஆர்) காணப்படும் மின்தூக்கி பிரச்னைகளில் மட்டுமல்லாது இதர பிரச்னைகளிலும் வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக மேம்பாடு மற்றும் வீடமைப்பு கருவூல மையம் (ரீச்) கேட்டுக் கொண்டது.

பெரும்பான்மையான மக்கள் வீடமைப்பு திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகின்றன என்று அதன் தலைமை மேலாளர் டத்தோ இஸ்கந்தர் அப்துல் சமாட் கூறினார்.
“சம்பந்தப்பட்ட வீடமைப்பு பகுதிகள் குடியிருப்பதற்குப் பாதுகாப்பானவை என்பதை உறுதிசெய்ய அரசாங்கம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார் அவர்.

“இதனிடையே, நாடு முழுவதும் உள்ள மக்கள் வீடமைப்புத் திட்டங்களில் மின்தூக்கி சம்பந்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடைமுறையைக் கண்டறிய அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய செயற்குழு ஒன்று தோற்றுவிக்கப்படும் என்ற வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடினின் அறிவிப்பை ரீச் வரவேற்கிறது” என்றார் அவர்.


Pengarang :