SELANGOR

“சிலாங்கூர் ராயல் டிரெயில் ஃபாம் டிரிப்” சுற்றுலா திட்டம்

ஷா ஆலம், ஆக. 6-

கோல சிலாங்கூர், கோல லங்காட் மற்றும் கிள்ளான் ஆகிய மூன்று மாவட்டங்களை 2 நாட்களுக்கு சுற்றிப் பார்க்கும் “சிலாங்கூர் ராயல் டிரெயில் ஃபாம் டிரிப்” சுற்றுலா திட்டத்தை சிலாங்கூர் சுற்றுலா துறை ஏற்பாடு செய்தது.

மாநிலத்தின் கலாச்சார, வரலாறு மற்றும் சிலாங்கூர் ஆட்சியாளர் குறித்து சுற்றுப் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த புதிய சுற்றுலா திட்டத்தின் நோக்கமாகும்.

பாரம்பரிய கலை கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் இந்தச் சுற்றுலா திட்டத்தில் அனைத்துலக மற்றும் உள்நாட்டு ஊடகவியலாளர்களும் பங்கேற்பர் என்று தெரிவிக்கப்பட்டது.
சிலாங்கூர் சுற்றுலா துறையை மேம்படுத்த கலாச்சார வடிவமைப்பிலான இந்த புதிய சுற்றுலா திட்டம் உதவும் என நம்பப்படுகிறது.


Pengarang :