NATIONAL

மோட்டார் சைக்கிள் டாக்சி சேவை: பாதுகாப்பு அம்சங்கள் மீது கவனம் தேவை! – கிராப் மலேசியா பரிந்துரை

கோலாலம்பூர், ஆக.23-

மோட்டார் சைக்கிள் டாக்சி சேவையை நாடு அறிமுகப்படுத்தினால் புத்தாக்கம் மற்றும் பாதுகாப்புமிக்க இணைய வழி மோட்டார் சைக்கிள் சேவையை கிராப் மலேசியா பயணிகளுக்கு அளிக்கத் தயாராகும் எனக் கூறப்படுகிறது.

பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொது போக்குவரத்து வாகன (பிஎஸ்வி) உரிமங்களுக்கான விதிமுறைகளை குறிப்பாக மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு அம்சங்களைக் கடுமையாக்க வேண்டும் என்றும் இந்நிறுவனம் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்வதாக இதன் தலைவர் ஷான் கோ தெரிவித்தார்.

கொள்கை அளவில் மோட்டார் சைக்கிள் டாக்சி சேவையை நாட்டில் அறிமுகப்படுத்தும் அமைச்சரவையின் கோரிக்கையை கிராப் ஆதரித்தாலும் இச்சேவையின் பாதுகாப்பு குறித்து அது அச்சம் தெரிவித்துள்ளது.
“மலேசியாவில் இச்சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பிலான சட்ட விவகாரங்கள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தும் வேளையில், இச்சேவையின் இதர கடுமையான அம்சங்கள் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பயணிகள், மோட்டார் சைக்கிளோட்டிகள், போக்குவரத்து சாலைகள், போக்குவரத்து நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த புள்ளிவிவரங்கள் ஆகியவற்றின் மீதும் அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியமாகும்” என்றார் அவர்.


Pengarang :