莎阿南市政厅
PBTSELANGOR

அபராதங்களுக்கு 50& வரை கழிவு! – எம்பிஎஸ்ஏ அறிவிப்பு

ஷா ஆலம், செப்.30:

ஷா ஆலம் மாநகரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு வரும் அக்டோபர் முதல் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரையில் இன்னும் செலுத்தப்படாத அபராதங்களுக்கு 50 விழுக்காடு வரையிலான கழிவை வழங்க ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) முடிவெடுத்துள்ளது.

பல்வேறு குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டவர்கள், தங்களின் செலுத்தப்படாத அபராதத் தொகையை செலுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இச்சிறப்புச் சலுகை வழங்கப்படுவதாக மன்றத்தின் பெருநிறுவன மற்றும் பொது தொடர்பு பிரிவு தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

அபராதம் விதிக்கப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பாக அவர்கள் இவற்றை விரைவாகச் செலுத்துவதற்கு உதவுவதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்றார் அவர்.

1983ஆம் ஆண்டு முடிதிருத்தும் நிலைய சட்டம், 2005ஆம் ஆண்டு பூங்கா சட்டம், உணவு சட்டம், உணவக நடத்துநர் சட்டம், விளம்பர சட்டம், அங்காடி கடை சட்டம், சந்தை சட்டம் மற்றும் 2007ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டம் ஆகியவற்றை மீறிய குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட அபராதங்கள் இச்சலுகைக்குத் தகுதி பெறும் பல்வேறு அபராதங்களில் அடங்கும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :