PBTSELANGOR

கிள்ளான் மெர்டேக்கா பாரம்பரிய நடைப்பயணம்: 5000 பேர் பங்கேற்றனர்

கிள்ளான், செப்.3-

நாட்டின் 62ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிள்ளான் பாரம்பரிய மெர்டேக்கா நடைப் பயணத்தில் சுமார் 5 ஆயிரம் பங்கேற்றனர். இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 1517 மாணவர்கள், அரசு சாரா அமைப்பினர் உட்பட அனைத்து தரப்பிலான பொது மக்கள் பங்கேற்றனர் என்று கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் (எம்பிகே) தலைவர் டத்தோ முகமது யாசிட் பிடின் கூறினார்.

கிள்ளான் ஆறு மற்றும் கோத்தா பாலம் ஆகியவற்றின் சுற்றுப்புறப்பகுதிகளுக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி சுங்கை கிள்ளான் பாரம்பரிய கிளப்பின் ஒத்துழைப்போடு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

இக்கிளப் தொடங்கப்பட்டது முதல் பல்வேறு பயிலரங்குகளை ஏற்பாடு செய்திருப்பதாகவும் சுங்கை கிள்ளான் பகுதியில் அவ்வப்போது கூட்டு துப்புரவு பணியும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளாகவும் முகமது யாசிட் குறிப்பிட்டார்.


Pengarang :