KUALA LUMPUR, 9 Sept — Yang di-Pertuan Agong Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah ketika bertitah pada Istiadat Pengurniaan Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan 2019 sempena Sambutan Ulang Tahun Hari Keputeraan Rasmi Yang di-Pertuan Agong di Istana Negara hari ini.?Turut mengiringi, Raja Permaisuri Agong Tunku Hajah Azizah Aminah Maimunah Iskandariah. ?–fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA?
NATIONALRENCANA PILIHAN

மாமன்னர்: தனிப்பட்ட ஆதாயத்திற்காக உணர்ச்சிகரமான விவகாரங்களைப் பயன்படுத்தாதீர் !!!

கோலாலம்பூர், செப்.9-

தனிப்பட்ட ஆதாய்த்திற்காக உணர்ச்சிகரமான விவகாரங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டாம் என்று மலேசியர்களுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா நினைவுருத்தினார்.

கூட்டரசு சட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அந்த சுதந்திரம் நாட்டின் ஒருமைப்பாட்டு கொள்கைகளை மீறக் கூடாது என்றார் அவர்.
“அதேபோல். அரசியலிலும் ஓர் எல்லை மற்றும் வரம்பு உண்டு. அவற்றை அரசியல் தலைவர்கள் மீறினால், பின்னர் மக்களும் அவ்வழியைத் தொடர்வர். பின்னர் அதன் விளைவு மிகவும் பாதகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று மாமன்னர் வலியுறுத்தினார்.

“62 ஆண்டுகாலம் கட்டிக் காக்கப்பட்ட ஒற்றுமையும் அமைதியும் சீர்குலைந்தால், அவற்றை மீண்டும் கொண்டு வருவது சிரமம் என்பதை நம்புங்கள். பழுதானவற்றை அகற்றிவிட்டு, தெளிவானதை எடுத்துக் கொள்வோம். சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டவுடன் அவற்றை உடனே சரி செய்து வழக்க நிலைக்குத் திரும்பச் செய்யுங்கள்” என்று மன்னர் மக்களுக்கு ஆலோசனை தெரிவித்தார்.


Pengarang :