Dato’ Dr Abd Latif Mahmod dan
NATIONALSELANGOR

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக ஃபிரிம் தேர்வு பெற யூகேஎம் உதவி

ஷா ஆலம், செப்.2-

ஐக்கிய நாட்டு அமைப்பின் அறிவியல் மற்றும் கலாச்சாரப் பிரிவில் (யுனெஸ்கோ) உலக பாரம்பரிய தலமாக மலேசிய வன ஆராய்ச்சி கழகத்தை (ஃப்ரிம்) இடம்பெறச் செய்ய தேசிய பல்கலைக்கழகத்தின் சட்டப் பிரிவின் உதவி நாடப்பட்டுள்ளது.

இதற்கான தேர்வு 3 கட்டங்களாக 18 மாதக் காலக் கட்டத்தில் நடைபெறும் என்று யூகேஎம் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவு துணை இணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் அப்துல் வகாப் முகமது கூறினார்.

“முதல் கட்டமானது, இப்பகுதி யுனெஸ்கோவின் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்படுவதன் தொடர்பில் ஏற்படும் சட்ட விவகாரங்களை யூகேஎம் சட்டப் பிரிவு கையாளும்” என்றார் அவர்.
ஆராய்ச்சியின் புள்ளி விவரங்கள் ஆராயப்படுவதோடு ஃபிரிம் தேர்வு பற்றிய “டோஸ்ஸியர்” எனும் குறிப்பு நூல் வெளியிடப்படும். என்றும் அவர் சொன்னார்.


Pengarang :