Amirudin Shari bersalam dengan penjawat awam ketika Perhimpunan Bulanan Jabatan Kerajaan Negeri yang berlangsung di Dewan Jubli Perak, Bangunan SUK Selangor. Foto ASRI SAPFIE/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 2020 பட்ஜெட்டில் சிறப்பு ஒதுக்கீடு

ஷா ஆலம், அக்.14-

2020ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுத் திட்டங்களுக்காக சிறப்பு ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதை மாநில அரசாங்கம் வரவேற்றது.

மாநிலத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை அனைத்து அரசு பணியாளர்களும் நன்கு பயன்படுத்தி 2025ஆம் ஆண்டில் விவேக மாநில அந்தஸ்தை அடைவதற்கு ஒத்துழைத்திட வேண்டும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கோரிக்கை விடுத்தார்.

என்எஃப்சிபி திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 216 பில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படிருப்பதானது 2022ஆம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் இணைய தொடர்பு கிடைக்கச் செய்யும் இலக்கு நிறைவேறுவதற்கு துணை புரியும் என்றார் அவர்.

உலு லங்காட் மாவட்ட நில அலுவலகத்தின் ஆடிட்டோரியம் ஜுப்ளி பேராக்கில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில இலாகாகளுக்கான மாதாந்திர கூட்டத்தில் மந்திரி பெசார் அமிருடின் மேற்கண்டவாறு பேசினார்


Pengarang :