Elya Marini Darmin turun padang bersama-sama penguat kuasa MPK, JPJ dan Polis Trafik Klang Selatan dalam Operasi Kenderaan Berat pada 30 November lalu. Foto Ihsan MPK
PBTSELANGOR

சாலையோரத்தில் நிறுத்தி வைத்த கன ரக வாகனங்களுக்கு சம்மன்!

கிள்ளான், டிச.2-

வீடமைப்பு பகுதியில் சாலையோரத்தில் கன ரக வாகனத்தை நிறுத்து வைத்தவருக்கு அமலாக்கத் தரப்பினர் அபராதமும் சம்மனும் விதித்தினர். கடந்த சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட கன ரக வாகனங்கள் மீதான அதிரடி நடவடிக்கையில் கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்பிகே) 17 அபராத அறிக்கைகளை வெளியிட்ட வேளையில், தென் கிள்ளான் போக்குவரத்து போலீசார் 16 சம்மன்களை வெளியிட்டனர்.

சாலை பயனீட்டாளர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து பொது மக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்பிகே செயலாளர் எலியா மாரினி டார்மின் கூறினார். வீடமைப்பு பகுதிகளில் உள்ள சாலையோரத்தில் கன ரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அங்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்றார் அவர்.


Pengarang :