KUALA LUMPUR, 3 Dis — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad ketika Mesyuarat Ketiga Penggal Kedua Parlimen Keempat Belas 2019 di Bangunan Parlimen hari ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே சட்டம் திருத்தப்படும்!

கோலாலம்பூர், டிச.3-

நடப்பில் உள்ள ஒரு சட்டத்தில் திருத்தம் செய்வது அல்லது அதை அகற்றுவதற்கு முன்னர் மக்கள் எண்ண ஓட்டம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் குறித்து ஆராய்வது அவசியம் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.
சம்பந்தப்பட்ட சட்டத்தை முழுமையாக அகற்றுவதா அல்லது திருத்தம் செய்வதன் சீரமைக்க முடியுமா என்று கண்டறிய அரசாங்கம் எண்ணம் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

மக்கள் விரும்பும் நியாயமான கொள்கை மற்றும் மனித உரிமை ஆகியவற்றோடு நாட்டின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிப்பதும் அவசியம் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.

“எனவே, தீவிர ஆய்வுக்குப் பின்னரே இது குறித்து முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் நாடு சிறப்பாக நிர்வகிக்கப்படுவதற்கும் அனைவரும் வளப்பதோடு வாழ்வதற்கும் இது அவசியம்” என்றும் மகாதீர் தெரிவித்தார்.

தேர்தல் கொள்கை அறிக்கையில் கடுமடையான அடக்கு முறையிலான சட்டங்கள் அகற்றப்படும் என்று நம்பிக்கை கூட்டணி வாக்களித்தது. அதன் தற்போதைய நிலை குறித்து சிகாமாட் எம்பி டாக்டர் ஆர். சந்தாரா குமார் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் பிரதமர் மகாதீர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.


Pengarang :