Dato’ Menteri Besar, Dato’ Seri Amirudin Shari Berucap pada Majlis Hadiah Sastera Selangor di SACC Mall, Shah Alam.16 Disember 2019. Foto REMY ARIFIN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக ‘மாஸ்டர் கிளாஸ்’ தொடங்க சிலாங்கூர் திட்டம்

ஷா ஆலம், டிச.17-

சிலாங்கூரில் அதிகமான புதிய எழுத்தாளர்களை உருவாக்கும் முயற்சியாக மாநில அரசாங்கம் பிரதான வகுப்பைத் (மாஸ்டர் கிளாஸ்) தொடங்கவிருப்பதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். வரும் 2020 ஆம் ஆண்டில் தொடங்கவிருக்கும் இந்த வகுப்பு தேசிய இலக்கியவாதிகளால் வழிநடத்தப்படும்.

புதிய எழுத்தாளர்கள் கலை மற்றும் பண்பாட்டுக்கு அப்பால் தங்களின் எழுத்தாற்றலை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவும் என்று மந்திரி பெசார் கூறினார்.
“இந்தப் பிரதான வகுப்பு சிறு முயற்சியாக இருக்கலாம்.ஆனால், இது மலேசியா பாரு கூறுகள் நிறைந்தாக இருக்கும்” என்றார் அவர்.

“பொறுப்பு மற்றும் புரிந்துணர்வுடன் மாநில அரசாங்கம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் தனது கடமையை இதன் வழி தொடரும். திறமையான எழுத்தாளர்கள் உருவாவதோடு இவர்கள் மாநிலத்தின் விலை மதிப்புள்ள சொத்தாக பின்னர் மாறுவர்” என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :