Bacaan Ikrar Perkhidmatan Awam pada Majlis Perhimpunan Agensi Agama Islam Selangor Auditorium, Dewan Syarahan dan Muzakarah Masjid Sultan Salahuddin Abdul Aziz Shah, Shah Alam. 28 Januari 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
SELANGOR

இணைய தளத்தில் பரவும் விவகாரங்களை தெளிவுபடுத்துவீர்! – மந்திரி பெசார்

ஷா ஆலாம், ஜன.28-

நடப்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இஸ்லாமிய சமயம் சார்ந்த அமைப்புகள் இணய தளங்களில் போலி தகவல்களைக் கையாள்வதில் விவேக போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

ஒவ்வொரு விவகாரம் குறித்தும் உடனடியாக விளக்கம் அளிக்கும் வகையில் அனைவரும் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே சமூக வளைத் தளங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன என்றார் அமிருடின்.

“வரும் 2025 ஆம் ஆண்டுவாக்கில் சிலாங்கூர் விவேக மாநிலமாக உருவாகும்போது இஸ்லாமிய சமயம் சார்ந்த இலாகா பின் தங்கிவிடக் கூடாது என்பதே எனது விருப்பம். சிந்தனை மாற்றம் மற்றும் இதற்கு முன்பு நாம் வாழ்ந்த வாழ்க்கை ஆகியவற்றுடன் நாம் தயாராக வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்

“இப்போதெல்லாம் பெரும்பாலான நடவடிக்கைகளை நாம் விரல்களைக் கொண்டே தொலைபேசி வழி மேற்கொள்கிறோம். இதன் அடிப்படையிலேயே நகரமும் மாநிலமும் செயல்படுகின்றன. அவ்வகையில் இஸ்லாமிய சமய இலாகாவும் விவேக அரசாங்கத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார் அமிருடின்.


Pengarang :