Dato’ Seri Amirudin Shari (kanan) bersama Ketua Pegawai Eksekutif Yayasan Selangor, Eddie Ahmad Khodzali (dua, kanan) menandatangani plak simbolik Sambutan Jubli Emas ke 50 tahun Yayasan Selangor ketika Program Santai Bersama Pengerusi Yayasan Selangor di Menara Yayasan Selangor, Petaling Jaya pada 15 Januari 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மேம்பாடடைய மக்கள் மாறுவது அவசியம்! – மந்திரி பெசார்

பெட்டாலிங் ஜெயா, ஜன.16-

தொழிற்துறை புரட்சி 4.0 சகாப்தத்திற்கு ஏற்ப தங்கள் ஆற்றலையும் திறனையும் மக்கள் மேம்படுத்திக் கொள்ளத் தவறினால், சிலாங்கூர் பின்னடைவை எதிர்நோக்கும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். விவேக உலக சகாப்த்தை ஆள்வதில் தோல்வியுற்றால், இம்மாநிலம் பொருளாதாரத்தில் சிரமங்களை எதிர்நோக்கக் கூடும். அதே வேளையில் உலக அளவிலான போட்டியிடும் ஆற்றலையும் இழக்க நேரிடும் என்று அவர் நினைவுறுத்தினார்.

“தற்போது பலர் உலகளாவிய தொழிற்துறை புரட்சி 4.0 குறித்து பேசி வருகின்றனர். இது எத்தனை முக்கியமானது என்பதை நானும் வலியுறுத்தி வருகிறேன்” என்றார் அவர்.
அன்றாட வாழ்க்கையில் இணையத்தின் பங்களிப்பு குறித்து பேசுகிறோம். இன்று அனைத்தும் மிகவும் துரிதமாக நடைபெறுகின்றன என்று சிலாங்கூர் யாயாசான் உறுப்பினர்களுடனான சந்திப்பில் அமிருடின் தெரிவித்தார்.
இவ்வாண்டு திட்ட்டமிடப்பட்டுள்ள முக்கிய கல்வி திட்டம் வெற்றி பெறுவதை மாநில அரசாங்கம் உறுதி செய்யும் என்றார் அவர்.


Pengarang :