PBTSELANGOR

எம்பிஎஸ் வீடமைப்புப் பராமரிப்பு பணிகளுக்கு அரசாங்கம் ரிம. 5 மில்லியன் ஒதுக்கீடு!

ரவாங், பிப்.6-

செலாயாங் நகராண்மைக் கழகத்தின் (எம்பிஎஸ்) அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 18 வீடமைப்புப் பராமரிப்புத் திட்டங்களுக்காக வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது.
“கூட்டு நிர்வாகக் கழகம் (ஜேஎம்பி) கடந்தாண்டு செய்த விண்ணப்பத்தை மலேசிய வீடமைப்புப் பராமரிப்பு நிதியின் கீழ் அமைச்சு அங்கீகரித்தது” என்று செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியோங் லியோங் கூறினார்.

“செலாயாங் நாடாளுமன்றத் தொகுதியில் 9 திட்டங்களும் எஞ்சியவை கோம்பாக், டாமன்சாரா மற்றும் சுங்கை பூலோ ஆகிய பகுதிகளில் அங்கீகரிகப்பட்டன” என்றார் அவர். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் குத்தகை வழங்கப்படுவதற்கு முன்னர் எம்பிஎஸ் அவற்றை மதிப்பீடு செய்யும். மே மாதம் தொடங்கி இப்பராமபரிப்பு பணிகள் கட்டம் கட்டமாகத் தொடங்கு என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
இந்நிகழ்ச்சியில் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட்டும் பங்கேற்றார்.


Pengarang :