AIM turut memberi tumpuan kepada usaha memperkasakan produk Sahabat dalam aspek pembungkusan dan pemasaran supaya mereka mampu mencapai pasaran lebih luas. Foto BERNAMA
ECONOMYNATIONAL

பி40 தொழில் முனைவர்களுக்கு அமானா இக்தியார் ரிம. 2.7 பில்லியன் ஒதுக்கீடு

கோலாலம்பூர், பிப்.11-

பி40 பிரிவைச் சேர்ந்த தொழில்முனைவர்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கு உதவும் மைக்கிரோ கடனுதவி திட்டத்திற்காக அமானா இக்தியார் மலேசியா (ஏய்ம்) 2.7 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள 380,000 பேருக்கு பயனளிக்கும் என்று அதன் நிர்வாக இயக்குநர் முகமது ஷாமிர் அப்துல் அசிஸ் கூறினார்.

“இவ்வாண்டு இந்நிறுவனத்தில் பதிந்து கொண்டுள்ளோரில் 56,000 பேர் வறுமைக் கோட்டிலிருந்து வெளியேறுவதற்கு உதவ நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது” என்றார் அவர்.  அந்த எண்ணிக்கையில் 95 விழுக்காட்டினர் ஏழைகளாவர், எஞ்சிய 5 விழுக்காட்டினர் மாதம் 600 ரிங்கிட்டிற்கும் குறைவான வருமானம் பெறும் பரம ஏழைகளாவர்” என்று அவர் சொன்னார்.


Pengarang :