ANTARABANGSANATIONAL

கோவிட்-19 ஓர் அபாய தொற்று நோய் – உலக சுகாதார நிறுவனம் பிரகடணம்

ஜெனிவா, மார்ச் 13-

கோவிட்-19 வைரஸ் கிருமி பரவல் கவலையளிக்கும் நிலையை அடைந்ததைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு அபாய தொற்று நோய் எனப் பிரகடணப்படுத்தியது. அபாய தொற்று நோய் என்பது எந்தவொரு வரையரையின்றி உலகெங்கிலும் பரவக் கூடிய ஒரு நோயாகும்.

“இதுவரை இந்த வைரஸ் 114 நாடுகளைச் சேர்ந்த 118,000 பேருக்கு மேல் தொற்றியுள்ளது. இவர்களில் 4,291 பேர் இந்நோய்க்கு பலியாகி உள்ளதோடு இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று ஐயுறப்படுகிறது” என்று இந்த அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அடானோம் கிபெரெயெசுஸ் கூறினார்.

“இதற்கு முன்னர் இந்த அளவு வேகமாகப் பரவிய ஒரு தொற்று நோய் ஏற்பட்டத்தில்லை. இந்நோயை எதிர்கொள்ளக் கூடிய போதுமான நடவடிக்கை இல்லாத்தது கவலை அளிப்பதாக உள்ளது” என்றார் அவர்.
இந்த நோயைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொத்தாம் பொதுவாக கூறியதோடு அனைத்து தரப்பும் இந்நோய்க்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்தார்.


Pengarang :