Foto Sumber: BERNAMA
NATIONALSELANGOR

கோவிட்-19 பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் மெனாரா பிஎன்எஸ்

கோலாலம்பூர், மார்ச் 13:

பரவாலப் பரவி வரும் கோவிட்-19 தொற்று கிருமியில் இருந்து தங்கள் பணியாளர்களைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக பெர்பாடனான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்எஸ்) பங்சார் சவுத்தில் உள்ள மெனாரா பிஎன்எஸ் கட்டடத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை அமல்படுத்தியது.

அக்கட்டடத்தில் பணியாற்றும் ஊழியர்கள், வாடகை குடியிருப்பாளர்கள் மற்றும் வருகையாளர்கள் ஆகியோரை நோய் கிருமி தாக்குதில் இருந்து பாதுகாக்க மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி வரையில் அக்கட்டடம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைத் தூய்மைப் படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டதாக பிஎன்எஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

அதே வேளையில் இக்கட்டடத்திற்குள் நுழையும் பணியாளர்கள், வருகையாளர்கள் அனைவர் மீது உடலின் உஷ்னம் பரிசோதனை மேற்கொள்ளப்படுதாகவும் அது கூறியது. இதனிடையே, இந்த கோவிட்-19 நெருக்கடியை எதிர்கொள்ள சிறப்பு நிர்வாகக் குழு ஒன்றையும் இந்நிறுவனம் தோற்றுவித்துள்ளது.

நடப்பு சூழ்நிலையைக் கண்காணிப்பதோடு இக்கட்டடத்தைப் பயன்படுத்துவோரிடம் இந்நோர் குறித்து நினைவூட்டுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்துவதும் அக்குழுவின் பொறுப்பாகும்.


Pengarang :