ANTARABANGSANATIONAL

சிங்கை கோவிட்-19 சம்பவங்களில் 96% அந்நியத் தொழிலாளர்களை உட்படுத்தியது

சிங்கப்பூர், ஏப்.21-

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று நேற்று உறுதி செய்யப்பட்ட சம்பவங்களில் 96 விழுக்காடு அக்குடியரசில் வேலை பெர்மிட் கொண்டு வேலை செய்யும் 25 தங்குமிடங்களில் தங்கியுள்ள தொழியாளர்களை உட்படுத்தியுள்ளன.
அன்றாடம் பதிவாகும் தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவ புள்ளிவிவரப் பட்டியலில் நேற்று 1,426 புதிதாகப் பதவாகியதன் மூலம் நாட்டின் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 8,041ஆக அதிகரித்தது.

அந்நியத் தொழிலாளர்கள் தங்குமிடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமான இந்த அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்தது. எனினும். தொற்று கண்டவர்களில் பெரும்பாலோர் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் எவரும் தீவிர கண்காணிப்பு பிரிவில் சேரக்கப்படவில்லை என்று அவ்வறிக்கை கூறியது.

திங்கள் கிழமை நிலவரப்படி உள்நாட்டைச் சேர்ந்த 25 பேருக்கும் நிரந்தர குடியுரிமை பெற்ற 32 பேருக்கும் இத்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை இக்குடியரசில் உள்ள 25 தொழிலாளர் தங்குமிடங்களில் 18 பரிசோதனைக்கு உட்பட்டுள்ளன. இங்கு வங்காளதேசம், இந்தியா, சீனா மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர்.


Pengarang :