PBTSELANGOR

தொற்று அதிகளவில் பரவும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை – எம்பிஎஸ்ஜே

ஷா ஆலம், ஏப்.2-

கோவிட்-19 பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அதிக ஆபத்துமிக்க பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை மார்ச் 30ஆம் தேதி கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்ஜே) தெரிவித்தது.
எம்பிஎஸ்ஜேயின் அட்டவணையின்படி மன்றத்தின் தலைமையகம், கிளை அலுவலகங்கள், 5 பொது சந்தைகள், பொது கழிப்பறை மற்றும் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று அதன் தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

எஸ்எஸ்15 சுபாங் ஜெயா நவீன சந்தை, பத்து 14 பூச்சோங் பொது சந்தை, தாமான் ஸ்ரீ செர்டாங் பொது சந்தை, எஸ்கே 6/1 பொது சந்தை மற்றும் ஸ்ரீகெம்பாங்கான், எஸ்கே 10 பொது சந்தை ஆகிய சந்தைகளே தூய்மைப்படுத்தப்படும் சந்தைகளாகும் என்ரார் அவர். கதவுகளின் கைப்பிடி, விளக்கு சுவிட்சுகள், நுழைவாயில் பகுதிகளில் அதிகம் தீண்டப்படும் பகுதிகள் மற்றும் கழிப்பறை ஆகியவற்றின் மீது சிலாங்கூர் சுகாதர துறை நிரணயித்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப கிருமிநாசினி தெளிக்கப்படுகின்றது என்று அவர் விவரித்தார்.


Pengarang :