KUCHING, 24 Mei — Pesara, Abdul Hai Ismail Pakir Muhiddin Shah, 75, (dua, kiri) dan isteri Endot Hairudin, 72, (kiri) menyambut ketibaan sanak-saudara sempena Aidilfitri di Kampung Nombor 3, Jalan Ajibah Abol, hari ini.?Perayaan Hari Raya Puasa tahun ini disambut dalam suasana norma baharu susulan Perintah Kawalan Pergerakan Bersyarat (PKPB), namun masyarakat Islam tetap meraikannya bersama keluarga dengan penuh kesyukuran. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

நோன்பு பெருநாள் வீடுகளுக்கு செல்லும் நடவடிக்கை இதற்கு மேல் இல்லை !!!

கோலாலம்பூர், மே 25:

நிபந்தனைக்குட்பட்ட நடமாடும்  கட்டுப்பாடு (பிகேபிபி) உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, ஷாவால் மாதத்தின் இரண்டாவது நாளில் மக்கள் வீடுகளுக்கு  வருகை புரியும் நடவடிக்கைக்கு அனுமதியில்லை. கோவிட் -19 தொற்று நோய் பரவல் ஏற்படுவதைத் தடுக்க, அரசாங்கம் உண்மையில் நோன்பு பெருநாள்  கொண்டாட்டத்தின் முதல் நாளில் மட்டுமே வீடுகளுக்கு வருகை முடிவதற்கு அனுமதி  வழங்கியது. இது 20 நெருங்கிய  குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும், சமூக தூரத்தை கடைப்பிடிப்பது மற்றும் சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட சீரான செயலாக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன் அரசாங்கம் அனுமதி வழங்கியது.

சில பொறுப்பற்ற தரப்பினர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயற்சித்தாலும் மற்றும் சிலர் எஸ்ஓபிகளை பின்பற்ற மறுத்துவிட்டாலும், நாட்டில் பலர் இந்த ஆண்டு விழாக்களின் புதிய விதிமுறைகளுக்கு ஏற்றவாறு இருப்பதாக தெரிகிறது. உதாரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஷாவால் மாதத்தின் முதல் நாளன்று  முஸ்லிம்கள் மசூதிகள், சூராவ் மற்றும் கல்லறைகளுக்கு பிரார்த்தனை செய்வது வழக்கம். பெரும்பாலான மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட தடை உத்தரவைத் தொடர்ந்து இவை அனைத்தும் அமைதியாக காணப்பட்டன. இந்தத் தடை மறைமுகமாக நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு நோன்பு பெருநாள்  பிரார்த்தனை அவர்களின் வீடுகளில் செய்வது  மூலம் குடும்ப உறவை வலுப்படுத்துகிறது. கூடுதலாக, தங்கள் அன்புக்குரியவர்கள் வீட்டிற்குத் திரும்ப முடியாத நிலையில், தொழில்நுட்ப முன்னேற்றங்களின் வழி தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வீடியோ அழைப்பு பயன்பாடுகள் மூலம் நோன்பு பெருநாள் வாாழ்த்துச் செய்திகளை பரிமாறிக் கொள்வது புதிய பரிணாமத்துடன் நோன்பு பெருநாளை வரவேற்க இதுவேே சரியான தருணம்.


Pengarang :