Hee Loy Sian meninjau keadaan Pasar Kajang yang kembali beroperasi pada 2 Jun 2020. Foto Facebook Hee Loy Sian
RENCANA PILIHANSELANGOR

காஜாங் பொதுச் சந்தை பல்வேறு எஸ்ஓபிகளை பின்பற்றி மீண்டும் செயல்படுகிறது !!!

காஜாங், ஜூன் 3:

அண்மையில் கிருமி நாசினி தெளிப்பதற்கு மூடப்பட்ட காஜாங் பொதுச் சந்தை பல்வேறு சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி  பொது மக்களுக்கு திறக்கப்படும் என காஜாங் சட்ட மன்ற உறுப்பினர் ஹீ லோய் சான் கூறினார். கோவிட்-19 நோயால் பரவலைத் தொடர்ந்து ஒரு நேரத்தில் 30 வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

” வாடிக்கையாளர்கள் அனைவரும் செலாங்கா செயலியை (பாதுகாப்பான முறையில் நுழைவோம்)  பயன்படுத்த வேண்டும். பெயர், கைப்பேசி எண் மற்றும் உடல் வெப்பநிலை சோதனை நடத்தப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. சந்தையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஒரு வழிப்பாதையாக மட்டுமே பயன்படுத்தப்படும். வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சமூக இடைவெளியை பொது மக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்று பயனீட்டாளர் நலன் ஆட்சிக்குழு உறுப்பினருமான லோய் சான் கூறினார். நேற்று, லோய் சான் மற்றும் காஜாங் நகராண்மை கழக (எம்பிகெஜே) தலைவர் டத்தோ ஸூல்கிப்லி காலிட் ஆகிய இருவரும் காஜாங் பொதுச் சந்தையின் சுத்தம் செய்யும் பணிகளை பார்வையிடுவதற்காக வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :