KUALA LUMPUR, 20 Mei — Izyan Farhana Sapei,26 (belakang) mengambil inisiatif untuk mengunting rambut adiknya, Mohamad Irfan Sapei, 19 (depan) ketika tinjauan Perintah Kawalan Pergerakan Bersyarat (PKPB) hari ini. Kementerian Kesihatan (KKM) sedang meneliti dan memperhalusi Prosedur Operasi Standard (SOP) berkaitan pengoperasian kedai gunting rambut dalam tempoh PKPB sebelum mencadangkan sama ada premis itu boleh dibuka atau tidak. — fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

முடிதிருத்தும் நிலையங்கள் ஜூன் 10 முதல் இயங்க அனுமதி- இஸ்மாயில் சப்ரி

முடிதிருத்தும் நிலையம் மற்றும் சிகையலங்கார நிலையம் ஜூன் 10 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார். இது குறித்து கவலைகள் இருக்கலாம் என்று இஸ்மாயில் ஒப்புக் கொண்ட போதிலும், கடுமையான சீீரான செயலாக்க நடைமுறைகள் (எஸ்ஓபி) அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

“அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட இயக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்கவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் ஒரு ஊடக மாநாட்டில் கூறினார். கோவிட்-19க்கு அதிக ஆபத்து இருப்பதாக கருதப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், அவர்கள் தலைமுடியை வெட்டுவதற்கு முன் கடைக்காரரிடம் முன்பதிவு செய்து கொள்வது கட்டாயமாகும்.

இதற்கிடையில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முடி வெட்டும் போது, பெற்றோர்கள் உடன் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் முகக்கவரியையும் ஏப்ரனையும் அணிய வேண்டும். ஒரு வாடிக்கையாளருக்குப் பயன்படுத்திய துண்டுகளை மீண்டும் மற்ற வாடிக்கையாளருக்கு பயன்படுத்தவும் அனுமதி இல்லை என்று இஸ்மாயில் கூறினார். நாற்காலியையும் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் தூரத்திற்கு பிரிக்க வேண்டும், என்று இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.


Pengarang :