PBTSELANGOR

விதிமுறைகளை மீறிய 14 வணிகத் தளங்கள் மீது எம்பிகே நடவடிக்கை !!

கிள்ளான், ஜூன் 4:

தாமான் கிள்ளான் ஜெயாவில், செலாம்பிட் சாலையில் 14 வணிகத் தளங்களுக்கு கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே) நோட்டிஸ் வழங்கியது. அதில் ஆறு அபராத நோட்டிஸ், இரண்டு நோட்டிஸ் மற்றும் ஆறு வாய் வழி எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாக எம்பிகேவின் பொதுத் தொடர்பு பிரிவு தலைவர் நோர்ஃபீஸா மாஃபீஸ் தெரிவித்தார்.

” பெரும்பாலான வணிக வளாகங்கள் எஞ்சிய உணவுகளை நேரடியாக கால்வாய்களுக்கு வீசியது கண்டு பிடிக்கப்பட்டது.ஆகவே, வணிகர்கள் விதிக்கப்படும் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். எதிர் வரும் காலங்களில் அப்படி பின்பற்றத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

பொது மக்களின் பல்வேறு புகார்களை தொடர்ந்து எம்பிகேவின் சுற்றுச்சூழல் சேவைப் பிரிவு மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைக்கு பிறகு எம்பிகே இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த வேளையில், எம்பிகே இப்பகுதியின் நகராண்மை கழக உறுப்பினர் மற்றும் பொது மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நோர்ஃபீஸா மாஃபீஸ் தெரிவித்தார்.


Pengarang :