Suasana ketika Saringan Komuniti Covid-19 secara pandu lalu hasil inisiatif Kerajaan Negeri bersama Klinik Selcare dan dipantau oleh Pejabat Kesihatan Daerah dilakukan di Seksyen 7, Shah Alam pada 18 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19 நோய் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளது; எந்த மரணமும் பதிவு செய்யப்படவில்லை !!!

புத்ராஜெயா, மே 2:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,176 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 105 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 11 புதிய நோயாளிகள் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள். இன்று எந்த ஒரு மரணமும் பதிவு செய்யப்படவில்லை . இதுவரையிலான மரண எண்ணிக்கை 103-ஆகவே உள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 31 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில் 12 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 116 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,326 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 70 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :