ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வறட்சி காலத்தில் நீர் பற்றாக்குறை பிரச்சனையை தீர்க்க செயல் திட்டம்- ஆட்சிக்குழு உறுப்பினர் தகவல்

ஷா ஆலம், நவ 27- நீண்ட வறட்சி காலத்தில் ஏற்படக்கூடிய நீர் பற்றாக்குறை பிரச்சனையை சமாளிக்கும் விதமாக சிலாங்கூர் அரசு தயார் நிலை செயல் திட்டத்தை வரைந்து வருகிறது.

வறட்சி ஏற்படும் சமயங்களில் போதுமான அளவு நீர் விநியோகம் இருப்பதை உறுதி செய்வதற்காக இவ்விவகாரம் மீது இன்னும் சில மாதங்களில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவிருப்பதாக பொது மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

அடுத்த பத்தாண்டுகளில் நீர் பற்றாக்குறை பிரச்சனை ஆற்றுத் தூய்மைக்கேடு மற்றும் குழாய் உடைப்பின் காரணமாக மட்டுமின்றி வறட்சியின் வாயிலாகவும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

தற்போதைக்கு வறட்சி ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லாவிட்டாலும் இந்த விஷயத்தில் நாம் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. ஏனென்றால் கடந்த 2014இல் கடுமையான வறட்சியை எதிர் நோக்கிய அனுபவம் நமக்கு உண்டு என அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே ஹோராஸ், ஓ.ஆர்.எஸ். போன்ற மாற்று நீர் உற்பத்தி திட்டங்கள் அமல் செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


Pengarang :