NATIONALSELANGORWANITA & KEBAJIKAN

கோவிட் -19 நோயாளிகளுக்கு,  இடர் மையமனையை உருவாக்க ஆயுதப்படைகள் (ஏடிஎம்) தயாராக உள்ளது

கோலாலம்பூர், ஜனவரி 9: தேவைப்பட்டால் கோவிட் -19 நோயாளிகளுக்கு,  இடர் மைய மருத்துவமனையை உருவாக்க மலேசிய ஆயுதப்படைகள் (ஏடிஎம்) தயாராக உள்ளது.
இது குறித்து, ஏடிஎம் தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ அஃபெண்டி புவாங் கூறுகையில், தற்போது 10,000 படுக்கை வசதிகள் கொண்ட மலேசியா செர்டாங் வேளாண் எக்ஸ்போ பூங்காவில் (MAEPS) மிகப்பெரிய  இடர் மைய  மருத்துவமனை உள்ளது.
நோய் தொற்று அதிகரிப்பு தொடர்ந்தால் மற்றும் (MAEPS) எனும் மேற்படி மையத்தில் நோயாளிகளுக்கு இடமளிக்க முடியாவிட்டால் (கோவிட் -19 நோயாளிகள்) சுகாதார அமைச்சகம் (MOH) மேலும் இடர் மைய  மருத்துவமனைகள் கோரினால், புதிய கட்டமைப்பினை உருவாக்க வாய்ப்புள்ளது.
தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப  இடர் மைய  மருத்துவமனை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும், மேலும் அதிக இடங்கள் சிகிச்சைக்குத் தேவை பட்டால், அதனை  ஏடிஎம்,  சுகாதார அமைச்சுடன் (MOH ) இணைந்து தேவைகளைப் பூர்த்தி செய்யப் பாடுபடும் என்று அவர் இன்று இங்குள்ள சுங்கை பீசி  அரச ராணுவக் கல்லூரியில் நினைவுச்சின்னம் அமைப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர்க் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் கூறினார்.
 இராணுவத் தலைமை ஜெனரல் டான் ஸ்ரீ ஜாம்ரோஸ் மொகமட் ஜெய்ன் மற்றும் விமானப்படை தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ அக்பால் அப்துல் சம ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல மாநிலங்களின்  நிலை  குறித்துக் கருத்து தெரிவித்த அஃபெண்டி, நிலைமை மோசமடைந்தால், சேவை மற்றும் மீட்பு  நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகத்  தேவையான வீரர்கள் மற்றும் அதற்கான உபகரணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏடிஎம் தயாராக உள்ளது என்றார்.
“தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் முழுவதும்  சுமார் 4,900 வீரர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் 1,015 பல்வேறு வித இராணுவ உபகரணங்கள்  பயன்படுத்தப்பட்டு வருகின்றன  என்று அவர் கூறினார்.
முன்னர் ஏடிஎம்-க்கு சொந்தமான தரவு நெட்வொர்க்குகள் மீதான சைபர் தாக்குதல்களுக்குப் பிறகு அது போன்ற தாக்குதல் அச்சுறுத்தல்கள் குறித்த சமீபத்திய  மேம்பாடுகள்  குறித்து கேள்விக்கு, தற்போதைக்குப் பாதுகாப்பு முறை  வலுவாக உள்ளதாகவும்,  அதன் திறன்  தொடர்ந்து மேம்படுத்தப் பட்டுவருவதாகவும் அஃபெண்டி புவாங்  உறுதியளித்தார்.

Pengarang :