ECONOMYNATIONALSELANGOR

வேலை  தேடுவோருக்கு உதவ புதிய அகப்பக்கம்- சிலாங்கூர் அரசு தொடக்கியது

ஷா ஆலம், ஜன 26- வேலையில்லாப் பிரச்னைக்கு குறுகியகால மற்றும் நீண்டகால அடிப்படையில் தீர்வு காண்பதற்கு ஏதுவாக www.selangorkerjaya.com.my  எனும் அகப்பக்கத்தை சிலாங்கூர் மாநில அரசு தொடக்கியுள்ளது.

வேலை தேடும் தரப்பினர் மற்றும் காலியாக உள்ள வேலைகளை நிரப்ப ஆட்களைத் தேடும் முதலாளிகள் குறித்த பல்வேறு தகவல்களை இந்த அகப்பக்கம் கொண்டிருக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது தவிர்த்து இந்த அகப்பக்கம் சமூக ஊடகங்களான முக நூல் இன்ஸ்டாகிராம், லிங்கெடின், டிவிட்டர், வாட்ஆப் புலனம் ஆகியவற்றின் வாயிலாக வேலை வாய்ப்பு குறித்து பொதுமக்களுடன் நேரடி உரையாடல்களையும் நடத்தும் என்று அவர் சொன்னார்.

இந்த சேவை முற்றிலும் இலவசமானது என்பதோடு இதற்கான முழு செலவையும் மாநில அரசு ஏற்றுக் கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

மாநிலத்தில் வேலை வாய்ப்புக்களைத் தேடித் தரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக  மாநில அரசு 5 கோடியே 80 லட்சம் வெள்ளியைத் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இளையோர் குறிப்பாக பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்தி வேலைகளைத் பெறுவேதோடு மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் முயற்சிகளுக்கும் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :