ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

இலவச கோவிட்-19 பரிசோதனை- காலை 8.00 மணிக்கே 100 பேர் திரண்டனர்

ஷா ஆலம், மார்ச் 7- இங்குள்ள சுபாங் பெர்டானா, டேவான் ரெசாக்கில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனையில் பங்கு கொள்வதற்காக பொதுமக்கள் காலை 8.00 மணிக்கே சுமார் 100 மண்டபத்தின் எதிரே வரிசை பிடித்து நின்றனர்.

இந்த பரிசோதனை திட்டத்தில் பங்கு கொள்ள பொதுமக்கள் காட்டிவரும் ஆர்வம் தங்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிளினிக் செல்கேர் நடவடிக்கை பிரிவு நிர்வாகி முகமது நோர் முகத நாசீர் கூறினார்.

இன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இந்த பரிசோதனை இயக்கத்தில் ஆயிரம்  பேர் வரை பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

இத்தகைய பரிசோதனைக்கு வெளியில் கட்டணம் விதிக்கப்படுவதால் மாநில அரசினால்  இலவசமாக வழங்கப்படும் இந்த வாய்ப்பை மேலும் அதிகமானோர் பயன்படுத்திக் கொள்வர் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் வழங்கும் இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொள்ள பொதுமக்கள் முன்வரவேண்டும். இதன் மூலம் நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றார் அவர்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் ஆண்டிஜென்(ஆர்டிகே-ஏஜி) விரைவு சோதனைக் கருவி பயன்படுத்தப்படுவதாகவும் இந்த கருவியின் வாயிலாக 24 மணி நேரத்தில் சோதனை முடிவுகளை அறிந்து கொள்ள இயலும் என்றும் அவர் கூறினார்.

இன்றைய இலவச பரிசோதனை இயக்கம் தாமான் சுபாங் பெர்டானா, தாமான் நுசா சுபாங், தாமான் பிங்கிரான் சுபாங், தாமான் சுபாங் இடாமான் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்களை மையமாக கொண்டு நடத்தப்பட்டது.


Pengarang :