SELANGOR

மக்களுக்கு சுகாதாரச் சேவையை வழங்கும் சிலாங்கூரை பின்பற்ற வேண்டும்

ஷா ஆலம், ஜனவரி 2:

மத்திய அரசாங்கம் தனியார் கிளினிக்குடன் இணைந்து செயல்பட்டு அரசாங்க மருத்துவமனை செலவீனங்களை மற்றும் நெரிசல்களைக்  குறைக்க முடியும் என்று மலேசிய மருத்துவர் கூட்டமைப்பு சங்கம் கூறியது. சங்கத்தின் துணைத் தலைவரான டாக்டர் ராஜ்குமார் மாஹாராஜா கூறுகையில், சிலாங்கூர் மாநில அரசாங்கம் அமல்படுத்திய பெடுலி சேஹாட் சுகாதார அட்டை போன்ற திட்டத்தை மத்திய அரசாங்கம்  நிறைவேற்ற முடியும் என்றார்.

”  சிலாங்கூர் மாநிலத்தின் இந்த  பரிவு மிக்க திட்டத்தை கண்டு மருத்துவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்கள். குறைந்த  வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பெடுலி சேஹாட் சுகாதார அட்டை போன்ற திட்டத்தை புத்ரா ஜெயா அமல்படுத்த வேண்டும். அரசாங்கம் மற்றும் தனியார் ஆகிய இருதரப்பு ஒத்துழைப்பு அரசாங்க மருத்துவமனைகளில் ஏற்படும் நெரிசல்களை குறைக்க உதவும்,” என்று மெலாய் மேய்ல் ஒன்லைன்க்கு தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் வருமானம் குறைந்த மட்டும் நடுத்தர குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சைகள் பெற முடியும் என்று விவரித்தார்.

 

 

 

 

#தமிழ் அரசன்


Pengarang :