NATIONAL

எஸ்பிஆரின் மாயாஜாலம்: ‘ராட்ஷ்ச சட்ட மன்ற’ தொகுதி உதயம்

ஷா ஆலம், ஜனவரி 4:

மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) கோத்தா அலாம் ஷா சட்ட மன்ற தொகுதியை தனது மாயாஜாலத்தினால் மறைத்து புதிய தொகுதிக்கு மாற்றம் செய்திருக்கிறது என்று ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார். இந்த நடவடிக்கையின் மூலம் பண்டாமாரான் சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர்கள் 30,000-இல் இருந்து 60,000-ம் ஆக உயர்வு பெற்றுள்ளது என்றார்.

”   கோத்தா அலாம் ஷா சட்ட மன்றத்தின் அடையாளம் மறைக்கப்படுகிறது. இதற்கு மாறாக பண்டாமாரான் ‘ராட்ஷ்ச சட்ட மன்றம்’ உருவாக்கப் பட்டுள்ளது. பண்டாமாரான் சட்ட மன்ற உறுப்பினரை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. 75,000 வாக்காளர்களுக்கு சேவை ஆற்றி வரும் சூழ்நிலையில் தள்ளப் போகிறார்கள்,” என்று கொன்கோர்ட் தங்கும் விடுதியில் நடைபெற்ற புதிய எல்லை மறுசீரமைப்பு கண்டனங்களை செவிமடுக்கும் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

மேலும் கூறுகையில், எஸ்பிஆரின் நடவடிக்கையை கூர்ந்து கவனிக்கும் போது ‘மூன்றாம் தரப்பினரின் தலையீடு’ தெரிகின்றது என்று கூறினார்.

#தமிழ் அரசன்


Pengarang :