NATIONAL

14-வது பொதுத் தேர்தலில் மக்களை பயமுறுத்தும் வியூகங்களை பயன்படுத்தாது !!!

ஷா ஆலம், மார்ச் 2:

எதிர் வரும் 14-வது பொது தேர்தலில் வெற்றி பெற நாட்டு மக்களை பயமுறுத்தும் நடவடிக்கைகளை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி  எதுவும் மேற்கொள்ள எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று அதன் அமைப்பு செயலாளர் டத்தோ சைப்பூஃடின் அப்துல்லா கூறினார். நீண்டகாலமாக அம்னோ தேசிய முன்னணி பொது மக்களை பீதி அடையச் செய்யும் பாணியை பின்பற்றி வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

”  பொது மக்களை குறிப்பாக வாக்காளர்களை பயமுறுத்தும் நடவடிக்கைகளை நாம் கையாளப் போவதில்லை. நாம் வெறும் லஞ்ச ஊழலையும், கொள்ளைக்காரக் கும்பலையும் மற்றும் அராஜகத்தையும் கண்டு பயப்படுவோம்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

 

 

 

 

 

 

டாரூல் எசான் மையத்தில் நடைபெற்ற 14-வது பொது தேர்தலில் பயப்படும் கலாச்சாரத்தை எதிர் கொள்ளும் வழிமுறை எனும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Pengarang :