NATIONAL

பேரரசர்: மக்களை பாதிக்கும் வாழ்க்கை செலவீனங்களை தீர்க்க வழி காண வேண்டும்

கோலா லம்பூர், மார்ச் 5:

மலேசிய மக்களை பெரிதும்  பாதிக்கும் வாழ்க்கை செலவினங்களை குறைக்கும் வழிகளை மத்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று மேன்மை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் இன்று தமது மக்களவையின் அதிகாரப்பூர்வ தொடக்க  விழாவில் உரையாற்றும் பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

”  மத்திய அரசாங்கம், நாட்டு மக்களின் தொடர்ந்து வரும்  பிரச்சினையான வாழ்க்கை செலவினங்கள் உயர்வை களைய சிறந்த தீர்வை காண வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அமல்படுத்தி இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படுத்த வேண்டும்,” என்று தமதுரையில் கூறினார்.

#தமிழ் பிரியன்


Pengarang :