SELANGOR

67% புதிய வாக்காளர்கள் மாநில அரசாங்கத்தின் செயல்பாட்டை மதிப்பீடு செய்வார்கள்?

ஷா ஆலாம்,மார்ச் 26:

நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநில அரசின் செயல்பாடும் வேட்பாளர் அடையாளமும் முக்கிய அம்சமாக விளங்கும்.

இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் 67 விழுகாடு புதிய வாக்காளர்கள் தங்களின் மதிப்பீட்டை செய்து வாக்களிப்பார்கள் என்றும் சுயட்சை அரசியல் ஆய்வாளர் டத்தோ டாக்டர் ஷம்சுல் அடாபி மமாட் தெரிவித்தார்.

சிலாங்கூரை பொருத்தமட்டில் மும்முனை போட்டி தவிர்க்க இயலாத ஒன்று.அந்நிலையில் வாக்காளர்கள் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் செயல்பாடு ரீதியிலும் வேட்பாளர்களின் தகுதி அடிப்படையிலும் வாக்களிக்கும் சூழல் உருவாகும்.

இன்னமும் நாட்டில் பாரம்பரிய கட்சிகள்,பாரம்பரிய அரசியல் எனும் ரீதியில் மக்களின் முடிவு இனி இருக்காது.அம்னோ,பாஸ் ஆகிய கட்சிகள் உடைந்து பெர்சத்து மற்றும் அமானா ஆகிய கட்சிகள் உருவெடுத்துள்க நிலையில் இனி அஃது நிகழாது என்றார்.

இந்நிலையில்,நடப்பு சிலாங்கூர் அரசு சார்ந்த கூட்டணிக்கு சாதகமாக சூழல் உருவாக பெரும் சாத்தியம் உண்டு என்றார்.சிலாங்கூர் அரசாங்கத்தின் செயல்பாட்டில் 70 விழுகாடு மக்கள் நிறைவு கொண்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ள வேளையில் நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் அஃது பெரும் பங்காற்றும்.

அன்மையில் பாங்கியில் அரசியல் கருத்தரங்கில் 1000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சிலாங்கூர் மாநிலம் முழுவதும் நடப்பு மாநில அரசின் செயல்பாட்டில் அனைவரும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருபதை உணர முடிந்ததாகவும் கூறினார்.

ஆறு மாதத்திற்கு முன்னர் இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சொன்னது போல் சிலாங்கூரில் ” சிலாங்கூர் உணர்ச்சி” எனும் அலை தொடரும்.அஃது தேர்தலில் பிரதிபலிக்கும்.

“சிலாங்கூர் உணர்ச்சி” அல்லது செண்டிமென் சிலாங்கூர் என்பது நடப்பில் சிலாங்கூரில் 70 விழுகாடு மக்கள் மாநில அரசின் மீது கொண்டிருக்கும் மனநிறைவின் அடிப்படையை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து பாக்காத்தான் கூட்டணி வசமிருக்கவும் அது வக்ஷிகோலும் என்றும் ஆய்வுகள் முடிவு தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.


Pengarang :