NATIONAL

உலகச் சந்தையில் விலை ஏற்றம் கண்டாலும் அரசாங்கம் எண்ணெய் விலையை உயர்த்தாது

புத்ரா ஜெயா , மே 23:

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு அமெரிக்க டாலர் 70-ஐ எட்டினாலும் மலேசியாவில் விலை ஏற்றப்படாது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். எண்ணெய் நிலையங்களில் விலைகள் தொடர்ந்து நிலைநிறுத்தப் பட்டுள்ளது என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வெற்றி பெற்ற பின் முதல் அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் துன் மகாதீர் பேசினார்.

 

 

 

 

 

இதனிடையே, பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) பற்றி கருத்துரைக்கயில், எதிர் வரும் ஜூன் முதல் தேதியில் இந்த வரி முற்றிலும் அகற்றப்படும் என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக துன் மகாதீர் கூறினார். நிதியமைச்சு இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவித்தார்.


Pengarang :