NATIONAL

நாட்டின் சமூக & பொருளாதார மேம்பாடுகளில் அரசாங்கம் கவனம் செலுத்தும் !!!

கோம்பாக், மே 28:

பொருளாதார விவகார அமைச்சு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு மக்களிடம் இருந்து தகவல்களை  கேட்டறிந்து மேம்பாட்டு திட்டங்களை வரைய உள்ளது என்று அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். பொருளாதார திட்டமிடல் பிரிவு மற்றும் புத்ராஜெயாவும் அரையாண்டு மறுஆய்வு செய்து வருகிறது என்றும் எதிர் வரும் செப்டம்பர் மாதம் அறிக்கையை தாக்கல் செய்யும் என்றார். இதன் மூலம் திட்டமிட்ட மேம்பாடுகள் சிறந்த அடைவு நிலையை எட்டும் என்று விவரித்தார்.

”  ஆனாலும் , பொருளாதார திட்டமிடல் பிரிவு மற்றும் தமது அமைச்சு, புதிய மலேசியா அரசாங்கம் ஏற்பட்டதால் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. புதிய மலேசியாவை உருவாக்க மாறுபட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அமைச்சரவை கூட்டத்திற்கு இதை எடுத்து சென்றேன். பொருளாதார திட்டமிடல் பிரிவு மறுஆய்வு அறிக்கையை செப்டம்பரில் தாக்கல் செய்ய வேண்டும்,” என்று தெரிவித்தார்.


Pengarang :