NATIONAL

14-வது பொதுத் தேர்தல்: பெர்சத்து கட்சி எஸ்பிஆரின் தவறுகளை ஆராய்ந்து வருகிறது !!!

பெட்டாலிங் ஜெயா , மே 28:

பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சி (பெர்சத்து) கடந்த 14-வது பொதுத் தேர்தலில் மலேசிய தேர்தல் ஆணையத்தின் (எஸ்பிஆர்) வழி  ஏற்பட்ட மோசடிகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். எஸ்பிஆரின் நடவடிக்கையினால் பெர்சத்து கட்சியின் தலைவர்கள் சில நாடாளுமன்ற தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளனர் என்றார். ஆனாலும், துன் மகாதீர்,  பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தேசிய முன்னணியை வீழ்த்தியதில் பெருமகிழ்ச்சி கொண்டார்.

”  கடந்த தேர்தலில் எஸ்பிஆரின் மோசடிகள் நிறைய காணப்படுகிறது. இதனால் பெர்சத்து கட்சியின் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். ஆரம்ப கட்டத்தில் வெற்றி பெற்ற பின், திடிரென புதிய பெட்டிகள் வந்த நிலையில் தோல்வி அடைந்தோம். சில இடங்களில் 700 இல் இருந்து 800 வரை செல்லா வாக்குகள் என அறிவிக்கப்பட்டது. இதனால் நமது வெற்றி வாய்ப்புகள் குறைந்தது,” என்று பெர்சத்து கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் துன் மகாதீர் பேசினார்.


Pengarang :