NATIONAL

விரைவு இரயில் திட்டத்தை பிரதமர் ரத்து !!!

பெட்டாலிங் ஜெயா, மே 28:

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், இதற்கு முன்பு தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் வழங்கிய கோலா லம்பூர் – சிங்கப்பூர் விரைவு இரயில் திட்டத்தை (எச்எஸ்ஆர்) ரத்து செய்தார். இந்த திட்டத்தின் முழு ஒப்பந்தத்தை இன்னும் பார்க்கவில்லை என்றாலும் மலேசியா ஏறக்குறைய ரிம 500 மில்லியனை பெனால்டி கட்டணமாக செலுத்த வேண்டும் என்றார்.

”  இது இறுதி முடிவு. ஆனாலும், நான் இன்னும் ஒப்பந்தத்தை பார்க்கவில்லை. ஏறக்குறைய 500 மில்லியன் கொடுக்க வேண்டும். இந்தத் தொகை மலேசிய ரிங்கிட் அல்லது சிங்கப்பூர் டாலரா என பேசி முடிவு எடுக்க வேண்டும்,” என்று பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.


Pengarang :