NATIONAL

உணவுகளின் விலை குறையும் என பிரேஸ்மா உறுதி?

ஷா ஆலம், மே 30:

மலேசிய இந்திய முஸ்லிம் உணவுக் கடைகள் சங்கம் (பிரேஸ்மா) எதிர் வரும் ஜூன் முதல் தேதியில் பொருட்கள் மற்றும் சேவை வரி அகற்றும் நிலையில் தங்களின் சங்கத்தின் கீழ் இயங்கும் உணவுக் கடைகள் விலைகளை குறைக்கும் என்று உறுதி அளித்ததாக அதன் தலைவர் அயோப் கான் முகமட் யாக்கோப் கூறினார். ஆறு சதவீதம்  ஜிஎஸ்டி வரி அகற்றப்பட்ட உடன் ஒரு மாதத்தில் விலைகளை மறுஆய்வு செய்ய இருக்கிறது என்று விவரித்தார்.

”  பிரேஸ்மா இந்த நடவடிக்கை மிக சுலபம் என்று கூறவில்லை. ஆனால் இது மிகக் கூடிய விரைவில் நடைமுறை படுத்த முடியும் என்று நம்பிக்கை உள்ளது. இதில் பயனீட்டாளர்களின் பங்கு மிக முக்கியமானது. விலை அதிகம் என்றால் குரல் கொடுக்க வேண்டும்,” என்று கம்போங் கெரிஞ்சி, அர்-ராஹா மசூதியில் பிரேஸ்மா மற்றும் மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்கம் ஏற்பாடு செய்த இப்ஃதார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அயோப் கான்  பேசினார்.


Pengarang :