NATIONAL

ஒருமைப்பாட்டை நிர்வாகத்தின் முதன்மை அடிப்படையாக கொள்ளவும் – அன்வார்

ஷா ஆலம் , மே 30:

நாட்டின் நிர்வாகமும் செயல்பாடுகளும் சரியான இலக்கில் பயணிக்க ஹராப்பான் கூட்டணி தலைவர்கள் குறிப்பாக இஸ்லாமிய தலைவர்கள் லஞ்சம் மற்றும் ஊழலிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.மேலும்,நாட்டின் நிர்வாகத்தன்மை அதன் இலக்கில் வெற்றியடைய ஒருமைப்பாட்டை நிர்வாகத்தின் முதன்மை அடிப்படையாக கொள்ள வேண்டும் எனவும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
அவ்வாறு நாம் சிறந்த ஒன்றை வாழ்வியல் அடிப்படையாக கொள்ளும் போது அஃது நம் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு மன நிறைவை அளிப்பதோடு அதுவே முன்மாதிரியாக விளங்கிடும்.மேலும்,நம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து தேர்வு செய்த இஸ்லாம் அல்லாதவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் விளங்குவதோடு நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பெரும் பங்காற்ற முடியும் என்றார்.
ஒரு இஸ்லாமிய தலைவர் லஞ்சம் ஊழலில் சிக்குண்டு,கொடுங்கோல் ஆட்சி புரிந்து மற்றும் ஒருமைப்பாடு இல்லாமல் போனால் ஒரு இஸ்லாமியரால் கூட ஏன் இஸ்லாம் கூட ஏற்றுக் கொள்ளாத நிலையில் இஸ்லாம் அல்லாதவர்கள் எப்படி நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைவுறுத்திய அன்வார் இப்ராஹிம் இஸ்லாமிய தலைவர்கள் நேர்மையாகவும் மக்களின் நலனின் அக்கறையும் ,ஒருமைப்பாட்டை பேணிகாத்திடவும் லஞ்சம் ஊழலுக்கு அப்பால்பட்டும் தன் கடமையினை மேற்கொள்ளும் போது மனித சமூகத்திற்கே முன்மாதிரியாக விளங்கிட முடிவதோடு மக்களுக்காக தலைவர்களாகவும் உருவெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
நம்பிக்கை கூட்டணி மக்களின் மனங்களை கவர்ந்துள்ளது.அது மக்களோடு நெருங்கி விட்டது என்றும் குறிப்பிட்ட அன்வார் இப்ராஹிம் மக்களின் பிரச்னைகளை களைவதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.மேலும்,நமக்கு ஆதரவு அளித்தவர்களில் பெரும்பான்மையோர் ஏழைகளும் துன்பத்தை அனுபவிப்பவர்களும்தான் என்றும் கூறிய அன்வார் இப்ராஹிம் அவர்களின் வாழ்வில் வெளிச்சத்தையும் விடியலை ஏற்படுத்திட நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் முழுமூச்சாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில்,மலேசியா மலேசியர்களுக்கு சொந்தமானது என குறிப்பிட்ட அவர் நாட்டின் அதிகாரப்பூர்வமான மொழியாகவும் அதிகாராப்பூர்வ நிகழ்வுகளின் மொழியாகவும் தேசிய மொழியாகவும் மலாய்மொழி தொடர்ந்து நீடிக்கும் என்றும் கூறினார்.இதைதான் மலேசியர்கள் விரும்புகிறார்கள் என்றும் கூறிய அவர் இருப்பினும் மலேசியா உலக அரங்கில் மேலும் வளர்ந்த நாடுகள் பட்டியலில் நிலைத்திருக்கு ஆங்கிலத்தின் ஆளுமையும் அவசியம் என்றார்.
நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி மலாய்தான்.அதுவே நாட்டின் தேசிய மொழி.அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் மலாய்மொழிதான் பிரதான மொழி.இருப்பினும் ஆங்கிலத்தின் ஆளுமையை ஒவ்வொரு மலெசியரும் கொண்டிருத்தல் அவசியம் என்றும் முன்னாள் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.


Pengarang :