KUALA LUMPUR 27 APRIL 2016. Presiden Cuepacs, Datuk Azih Muda. NSTP/KHAIRUL AZHAR AHMAD
NATIONAL

குத்தகை தொழிலாளர்களின் வேலை நிறுத்த உத்தரவை நீடிக்கவும் – கியூபெக்ஸ்!!

புத்ரா ஜெயா, மே 30:

குத்தகை அடிப்படையில் பொதுத் சேவை துறையில் வேலை செய்யும் பணியாளர்களை நீக்கும் உத்தரவை இன்னும் ஆறு மாதக்காலத்திற்கு நீடிக்கும்படி கியூபெக்ஸ் கேட்டுக் கொண்டது.அரசாங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த சில இலாக்காவினை மத்திய அரசாங்கம் இழுத்த மூடிய நடவடிக்கைக்கு பின்னர் கியூபெக்ஸ் தலைவர் டத்தோ அசி முடா இக்கோரிக்கை முன் வைத்தார்.
இக்கோரிக்கையின் மூலம் அரசாங்கம் சம்மதப்பட்டவர்களின் பணி நீக்கம் தொடர்பிலான உத்தரவை குறைந்தது ஆறு மாதத்திற்கு தள்ளிப் போட்டாள் அவர்கள் புதிய வேலையை தேடுவதற்கு அவர்கள் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்துக் கொள்வதற்கும் அஃது வாய்ப்பாக அமையும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் வேலை நீக்கத்தை எதிர்க்கொள்பவர்கள் கடன் தொல்லை,பொருளாதார சிக்கல்,அவர்களின் கடமை மற்றும் வாழ்வாதார ரீதியில் பெரும் சவால்களை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை கருத்தில் கொண்டே இக்கோரிக்கையை முன் வைப்பதாகவும் குறிப்பிட்டார்.
முந்தைய அரசாங்கத்தின் அரசியல் ரீதியிலான நியமனங்களை கொண்ட தொழிலாளர்கள் மட்டுமே வேலை நீக்கம் செய்யப்படுவதாக நம்பப்பட்டாலும் அவர்களும் அவர்களுக்கு சுமையை கொடுக்கும் நிலையிலான செயல்பாடுகளை மத்திய அரசாங்கம் மேற்கொண்டுவிடக்கூடாது.அந்நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் சம்மதப்பட்ட நோட்டிஸ்யை இன்னும் 6 மாதக்காலத்திற்கு நீடித்தால் மிகவும் சிறப்பாகனதாகவும் விவேகம் மிக்கதாகவும் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :