NATIONAL

வாக்களிக்கும் வயது குறைக்கப் பட வேண்டும்; பிடிஎன் அகற்றப்படும்

சுபாங் ஜெயா, ஜூலை 10:

தேர்தலில் வாக்களிக்கும் வயது வரம்பு 21-இல் இருந்து 18 வயதிற்கு குறைக்க வேண்டும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தினார். இதில் தனது பங்களிப்பை உறுதி செய்வதாக கூறினார். 18 வயது இளைஞர்களின் சிந்திக்கும் திறனை பற்றி கேவலமாக நினைக்கக் கூடாது என்று விவரித்தார்.

” இளையோர்கள் திறந்த மனப்பான்மை கொண்டவர்கள். பல கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள். புதிய பல்லின மலேசியாவை உருவாக்கும் நோக்கில் உள்ளவர்கள்,” என்று சன்வே பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற புதிய அரசியல் மாற்றம் மற்றும் இளையோர் எதிர்பார்ப்பு எனும் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது இவ்வாறு கூறினார்.

மேலும், பிடிஎன் எனப்படும் ஆட்சிஅமைப்பு இலாகாவை கூடிய விரைவில் அகற்றப்படும் என்று அறிவித்தார்.


Pengarang :