NATIONAL

காணாமல் போனது வெ.19.24 பில்லியன் – லிம் குவான் எங் தகவல்!!

கோலாலம்பூர்,ஆக13:

திருப்பி செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி எனப்படும் பொருள் சேவை வரியின் பணம் வெ.19.24 பில்லியன் காணாமல் போய்விட்டதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் உறுதிப்படுத்தினார்.

இதற்கு முன்னர் காணாமல் போன தொகை வெ.17.91 பில்லியன் என கூறப்பட்ட நிலையில் உண்மையான தொகை வெ.19.25 பில்லியம் என்று அவர் கூறினார்.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரியானது நிறுவனங்களுக்கு திருப்பி தந்திர வேண்டும்.அவ்வாறு செய்யப்படாத நிலையில் அவை சுங்கத் துறையின் சிறப்பு நிதியிலும் வைக்கப்படவில்லை என கூறிய லிம் குவான் எங் அவ்வளவு பெரிய தொகை காணாமல் போய்விட்டதாக தெரிவித்தார்.

சுங்கத் துறையின் பதிவின் சான்றில் கடந்த 31 மே மாதம் 2018 வரை திருப்பி செலுத்தப்பட வேண்டிய ஜி.எஸ்.டி வரியின் தொகை வெ.19.4 பில்லியன் என்றார்.

இதில்,2018இல் 9.2பில்லியன்,2017இல் 6.8 பில்லியன்,2.8 பில்லியன் 2016 மற்றும் 0.6பில்லியன் 2015 என்றும் அவர் நாடாளுமன்றத்தில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :