SELANGOR

ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தல் : இனங்களின் நல்லிணக்கத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் தொடரும்!!!

கிளானா ஜெயா, ஆகஸ்ட் 27:

இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவேன் என்று ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் போட்டியிடும் வேட்பாளரான ஹாலிமி அபு பாக்கார் உறுதி கூறினார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்மின் கொள்கையை பின்பற்றி எல்லா மக்களின் ஒருமைப்பாட்டை வளர்க்கும் செயல்கள் மேற்கொள்ளப்படும் என்று மேலும் கூறினார்.

” இந்த இடைத்தேர்தலில் மக்கள் வாய்ப்பு வழங்கினால், நான் ஒரு இனத்தின் தலைவராக மட்டுமில்லாமல், அனைத்து இனங்களையும் கட்டிக் காக்கும் தலைவராக செயல்படுவேன். கெஅடிலான் மற்றும் பாக்காத்தான் கொள்கை, அனைத்து இனங்களின் நலத்தையும் பேணிக் காக்க வேண்டும். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைமைத்துவத்திலும் மற்றும் அமைச்சரவையிலும் பல்வேறு இனங்களை பிரதிநிதித்து இருப்பது நாம் கண்கூடாக பார்க்கிறோம்,” என்று ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தல் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு ஹாலிமி பேசினார்.

 


Pengarang :