SELANGOR

ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தல்: ஐபிஆர் பிரீமை விட சிறந்த திட்டம் !!!

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 28:

சிலாங்கூர் மாநிலம் அறிமுகப்படுத்திய பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் (ஐபிஆர்), மகளிரை வளப்படுத்துவதில் 1 மலேசியா மக்கள் உதவித் திட்டத்தை (பிரீம்) விட சிறந்த முறையில் பயனளிக்கும் என்று ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வேட்பாளராக களம் இறங்கும் ஹாலிமி அபு பாக்கார் கூறினார். ஐபிஆர் திட்டங்களின் மூலம் சிலாங்கூர் அன்பு தாய் திட்டம் (கீஸ்), பெடுலி சேஹாட் சுகாதார அட்டை மற்றும் ஹிஜ்ரா கடனுதவி போன்றவை மகளிருக்கு சிறந்த முறையில் பயனளிக்கும் என்று கூறினால் அது மிகையாகாது.

”  ஐபிஆர் பிரீமை விட சிறந்த திட்டம். கீஸ் அட்டைகளின் வழி மகளிர் மாதத்திற்கு ரிம 200 மதிப்பிலான உணவு பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மகளிர் பெரும்பாலும் கீஸ், பெடுலி சேஹாட் சுகாதார அட்டை அல்லது ஹிஜ்ரா கடனுதவி திட்டங்களில் விண்ணப்பம் செய்கிறார்கள்,” என்று ஸ்ரீ செத்தியா சட்ட மன்ற தேர்தல் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு பேசினார்.


Pengarang :