NATIONAL

மக்கள் தொடர்ந்து பாக்காத்தானை ஆதரிக்கின்றனர்

கோலா லம்பூர், டிசம்பர் 28:

கடந்த 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் பாக்காத்தான் ஹாராப்பான் மற்றும் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமைத்துவம் மீதான மக்களின் ஆதரவு தொடர்ந்து வலுவான நிலையில் இருக்கிறது என்று அனைத்துலக இஸ்லாமிய மலேசிய பல்கலைக் கழகத்தின் தேர்தல் ஆய்வு பிரிவு, பேராசிரியர் முனைவர் டத்தோ ஸ்ரீ சைட் அராபி ஐடிட் மற்றும் அவரின் உதவியாளர் அஸ்ரூல் ஹிஷாம் வகிச்சான் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில்,  பாஸ் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹாடி ஹாவாங் மற்றும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் ஆகியோர் மீதான ஆதரவு நிலையாக அல்லது 1% ஏற்றமாகவோ அல்லது இறக்கமாகவோ இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பாக்காத்தான் (வாரிசான் உட்பட)  மீதான ஆதரவு 55% தொடர்ந்து உள்ளதாகவும், தேசிய முன்னணி (24%) மற்றும் பாஸ் கட்சி (16%) ஆக இருக்கிறது என்பதை ஆய்வு தெரிவிக்கிறது.

#தகவல் :பெர்னாமா


Pengarang :