NATIONAL

புகைபிடிக்கும் தடை: முதல் முறையாக மீறுவோருக்கு வெ 500 அபராதம்

புத்ரா ஜெயா, ஜனவரி 4:

உணவகங்களில் புகைபிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை முதல் முறையாக மீறும் வாடிக்கையாளர்களுக்கு சுகாதார அமைச்சு வெள்ளி 500 அபராதம் விதிக்கும். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வாய்மொழி வழியாக எச்சரிக்கை விடுக்கப்படும் காலக் கெடு முடிவுற்ற பின்னரும் இந்தத் தடையை மீறும் வாடிக்கையாளருக்கு அந்த சம்மன் வெளியிடப்படும் என்று சுகாதாரத் துறை துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.

மாவட்ட சுகாதாரத் துறை அமலாக்க அதிகாரி வெளியிடும் சம்மனைப் பெற்ற பின்னர் அடுத்த 2 வார காலக்கட்டத்திற்குள் சம்மனைச் செலுத்த வேண்டும்.
வழங்கப்படும் காலக்கெடுவிற்குள் அபராதம் செலுத்தத் தவறுபவருக்கு கூடுதல் பட்சம் 10 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.”

கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் உணவகங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அமலாக்கம் கண்ட 6 மாத காலக் கட்டத்திற்கு இத்தடையை மீறும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது என்று கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சு முடிவெடுத்ததாக துணை அமைச்சர் தெரிவித்தார்.


Pengarang :