SELANGOR

14ஆவது பொது தேர்தல்: பெண்களுக்கான கோட்டாவை சிலாங்கூர் நிறைவேற்றவில்லை

ஷா ஆலம், ஜன.15:

14ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் 25.4 விழுக்காட்டு பெண்கள் ( 365 வேட்பாளர்களில் 36 ) போட்டியிட்டது பெண்களுக்கான 30 விழுக்காடு கோட்டா இன்னும் நிறைவேறவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.

ஒட்டு மொத்தத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் 10.7 விழுக்காட்டினர் ( 75 வேட்பாளர்களில் எண்மர் பெண்கள்) போட்டியிட்ட வேளையில் சட்டமன்ற தேர்தலில் 14.7 விழுக்காட்டினர் ( 190 வேட்பாளர்களில் 28 பெண்கள்) மட்டுமே பங்கேற்றனர் என்று சுயேட்சை ஆய்வாளர் டாக்டர் டான் பெங் ஹுய் கூறினார்.

இது கூட்டரசு பிரதேச நாடாளுமன்ற தேர்தலில் 23.7 விழுக்காட்டு பெண்களும் பினாங்கில் 17.1 விழுகாட்டு பெண்களும் ஜோகூரில் 16.2 விழுக்காட்டு பெண்களும் ஈடுபட்டதை ஒப்பிடுகையில், சிலாங்கூர் மாநிலம் அதன் கோட்டாவை அடைய வெகு தூரம் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, சட்டமன்ற தேர்தலில் பெர்லிஸ் மாநிலத்தில் 17.4 விழுக்காட்டு பெண்கள் ஈடுபட்ட வேளையில் சிலாங்கூரின் 46 தொகுதிகளில் 8 இடங்களில் மட்டுமே பெண்கள் போட்டியிட்டனர் என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.


Pengarang :