NATIONAL

உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் அலாவுதீன் அற்புத விளக்கு கொண்டிருக்கவில்லை !!!

செமிஞ்சே, பிப்ரவரி 27:

நாட்டின் பொருளாதாரதத்தை மறுசீரமைப்பு செய்வது புராணக் கதைகளில் வரும் அலாவுதீன் அற்புத விளக்கை தேய்த்து மாற்றுவது அல்ல மாறாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும், இதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் முகமட் அனுவார் முகமட் தாஹீர் கூறினார்

” நாட்டை மறுசீரமைப்பு செய்ய பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறோம். எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க அலாவுதீன் அற்புத விளக்கை தேய்த்த பின் பூதம் புறப்பட்டு தீர்க்கும் சமாசாரம் அல்ல. நாம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பாக்காத்தான் ஹாராப்பான் தலைவர்களுக்கு அனுபவம் இல்லாத நிலையிலும் ஆண்டவனின் ஆசியில் நேர்மையும் ஊழலற்ற ஆட்சியை நடத்த முடியும்,” என்று ரிஞ்சிங் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற செமிஞ்சே இடைத் தேர்தல் பிரசார கூட்டத்தில் இவ்வாறு அவர் பேசினார்.

இந்த எட்டு மாத ஆட்சியில் பாக்காத்தான் அரசாங்கத்தின் மீது பல்வேறு அவதூறுகளை எதிர்க்கட்சி தலைவர்கள் அள்ளி வீசி வருகின்றனர். ஆனாலும், மலேசிய மக்கள் எதிர்க்கட்சிகளின் சதி வேலைகளை நம்பாமல் தொடர்ந்து பாக்காத்தான் அரசாங்கம் மாற்றங்களை செய்ய ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Pengarang :