NATIONAL

புதிய வாழ்க்கைச் செலவினக் குறியீடு மக்களின் சுபிட்சத்திற்கு உத்தரவாதம்

கோலாலம்பூர், மார்ச் 5-

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் வாழ்க்கைச் செலவினத்தை அளவிடும் குறியீடு பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவின் அழுத்தத்தை குறைக்கும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு நம்புகிறது.

நடப்பில் உள்ள பயனீட்டாளர் விலை குறியீடு, பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் எதிர்நோக்கும் சிரமத்தை தெளிவாகக் காட்டவில்லை என்று அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நாசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய குறியீடானது, பொருட்களின் விலைவாசி அதிகரிப்பையும் வாழ்க்கைச் செலவினத்தையும் துல்லிதமாக கணக்கிடும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

“அரசாங்கம் இதுவரை பயனீட்டாளர் விலை குறியீட்டையும் பணவிக்க குறியீட்டையும் சார்ந்து வந்துள்ளது. ஆனால், அடிமட்ட மக்கள் எதிர்நோக்கும் உண்மையான சூழலை இந்த குறியீடு உணர்த்தத் தவறியுள்ளது” என்று நாசுத்தியோன் கூறினார்.


Pengarang :